NN9

உண்மை செய்திகள் உடனுக்குடன்

பாகிஸ்தானுக்கு செக்..! மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..!

1 min read

இந்தியா என்கிற பெரிய துணை கண்டத்தில் இருந்து 1947-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடு தான் பாகிஸ்தான். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அந்த கசப்பான சம்பவங்கள் எல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.

இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாத சிக்கல்களை ஒழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானும் தீவிரவாத சிக்கல்களினால் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து விடக் கூடாது என போராடி வருகிறது.

பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நிலையில் உள்ளதாகவும், இது மேலும் மோசமான பிரச்சனை சந்திக்கலாம் என்றும் ஆராய்ச்சி நிறுவனமான மூடிஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இந்த பணவீக்க விகிதமானது 9 சதவிகிதத்தை தாண்டி போய் கொண்டு இருக்கிறது.. இதற்கு சிறந்த உதாரணம் அங்கு, ஒரு லிட்டர் பாலின் விலையானது 140 ரூபாய்..இது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை விட அதிகமாகும்.

கடனுக்கு பெட்ரோல் வாங்கி அதை வைத்து இவ்வளவு நாளும் சாமாளித்தது பாகிஸ்தான்,, அதனால் தான் பாலின் விலையை விட பெட்ரோல் விலை குறைவு ,,

ஆனால் இந்நிலையில் பெட்ரோலிய நாடுகள் பழைய பாக்கியை உடனே தர வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறது ,, இது பாகிஸ்தானுக்கு மிக பெரிய பேரிடியாக இருக்கிறது …

இந்நிலையில் பொருளாதாரத்தை சரி செய்தே ஆக வேண்டும் பாகிஸ்தானுக்கு

ஆனால் பாகிஸ்தானின் நிலைமையை
சரி செய்ய பணம் வேண்டுமே. இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தானுக்கு இரண்டு கரங்களையும் நீட்டி பணம் கொடுத்து ஆதரிப்பது சீனா மட்டும் தான்.

இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் புகைச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சந்தர்பத்தை தொடர்ந்து சீனா பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு சாட்சி பாகிஸ்தானை தொடர்ந்து ஆதரித்து வருவது தான்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை ஐநாவில் ஒரு சர்வதேச பயங்கரவாதமாக அறிவிக்க பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைவரையும் கருத்து கேட்ட போது அணைத்து நாடுகளும் பாகிஸ்தானை எதிர்த்தது சீனா மட்டும் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக சீனா, தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான்.

ஆனால் இப்போது பிரச்னை என்னவென்றால்

வரும் ஜூன் 2022-க்குள் பாகிஸ்தான், சீனாவுக்கு மட்டும் சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த பணம் வணிக கடனாக சீனா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த பணம். ஆனால் இதில் வேடிக்கை என்ன தெரியுமா..? பாகிஸ்தானுக்கு சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) கொடுத்த கடனை விட, சுமார் இரண்டு மடங்கு கூடுதல் கடனை சீனா கொடுத்து இருக்கிறது.

சீனாவின் கொள்கை கடன் கொடுத்து அதை வைத்து மிரட்டியே நாடுகளை பணிய வைத்து விடும்

சீனா கிட்ட தட்ட ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இணைக்கும் விதத்தில் கொண்டு வர இருக்கும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் அதிக கடன் வாங்கியது பாகிஸ்தான் தான்.

அந்த கால கட்டத்தில் அந்த திட்டத்தால் பாகிஸ்தானுக்கு என்ன கெடுதல் என்று யோசிக்காமல் பாகிஸ்தான் தன் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள சீனாவிடம் இருந்து அதிகம் கடன் வாங்கியது. அப்போதும் பாகிஸ்தானுக்கு வாங்கிய பணம் போதவில்லை. மேலும் பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கி தன் பொருளாதாரத்தை சமாளிக்க முயன்றது. இன்று வரை பொருளாதாரம் மீண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

கடன் வாங்கும் போது பாகிஸ்தான் தன் குறுகிய கால நன்மைகளைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு அப்போதைக்கு பாகிஸ்தானின் நிதி நிலையை மேம்படுத்தவே நினைத்து கடன் வாங்கியது. அப்போது நீண்ட காலத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. இப்போது பாகிஸ்தான் வரும் ஜூன் 2022-க்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது

மேலும் பல ஆண்டுகளாக பரந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது

அதே மூன்று ஆண்டு காலத்துக்குள்,

பாகிஸ்தான், சர்வதேச பன்னாட்டு நிதியம் வழங்கிய 2.8 பில்லியன் டாலர் கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஆக மொத்தம் சீனாவுக்கு 6.7 பில்லியன் டாலர் + பன்னாட்டு நிதியத்துக்கு 2.8 பில்லியன் டாலர் என மொத்தம் 9.5 பில்லியன் டாலரை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

சீனா இனி பணம் கொடுக்காது.. அதற்கு இரண்டு காரணங்கள்,, #ஓன்று பலுசிஸ்தான் வழியாகத்தான் சீனாவுக்கு பெட்ரோல் வருகிறது,, அது இப்போது பிரச்சனையாகி வருகிறது,, #இரண்டு ஆக்கிரமிப்பு காஸ்மீர் பிரச்சனையாகி வருகிறது,, ஆதாயம் இல்லாமல் சீனா யாருக்குமே பணமோ ஆதரவோ கொடுக்காது,,

ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் விரைவில் மிக மோசான நிதிச் சிக்கலை சந்திக்கலாம் என்று கருதப்படுகிறது.

சரி சீனாவாவது சொத்தை எழுதி வாங்கி விடும்… பன்னாட்டு நிதியம் என்ன செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *